மேலும் செய்திகள்
பொது கழிப்பறை சீரமைக்க அரசு நகரினர் வலியுறுத்தல்
10-Feb-2025
திருக்காலிமேடு, காஞ்சிபுரம் மாநகராட்சி, துணை மேயர் வார்டான, 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு சின்ன வேப்பங்குளக்கரையில் இயங்கும் அங்கன்வாடி மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு என, கழிப்பறை கட்டடம்கட்டப்பட்டுள்ளது. இருப்பினும், கழிப்பறையை பயன்படுத்த குழாய் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தவில்லை.இதனால், குழந்தைகள்கழிப்பறையை, பயன் படுத்த முடியாமல்,குளக்கரை ஒட்டியுள்ள திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்க வேண்டிய அவலநிலை உள்ளது.எனவே, காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் வார்டான, திருக்காலி மேடு சின்ன வேப்பங்குளக்கரையில் இயங்கும்அங்கன்வாடி மைய கழிப்பறைக்கு, குழாய் அமைத்து தண்ணீர்வசதி ஏற்படுத்தி தர,வேண்டும் என, இம்மையத்தில் பயிலும்குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
10-Feb-2025