| ADDED : ஏப் 12, 2024 09:21 PM
சென்னை:நாட்டில் உள்ள தனியார் விளையாட்டு அமைப்புகளின் சார்பில், அகில இந்திய ஹாக்கி போட்டிகள், மே 24ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை நடக்கின்றன.தமிழகத்தின், துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியின் மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் போட்டிகள் நடக்க உள்ளன. இதில் பங்கேற்க உள்ள தமிழக ஹாக்கி யூனிட் சார்பில், 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த தேர்வு, சென்னை, எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில், நாளை காலை 7:00 மணி முதல் நடக்க உள்ளது. 2005ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் பங்கேற்று, மாநிலத்துக்காக விளையாடும் வாய்ப்பை பெறலாம்.மேலும் விபரங்களுக்கு, 84286 60299, 89391 45152, 99419 23899 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.hockeyunitoftamilnadu.inஎன்ற இணையதளத்திலோ, hut.gmail.comஎன்ற மின்னஞ்சல் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம்.