உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பராமரிப்பின்றி புதர்கள் நிறைந்த அரும்புலியூர் துணை சுகாதார நிலையம்

பராமரிப்பின்றி புதர்கள் நிறைந்த அரும்புலியூர் துணை சுகாதார நிலையம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது அரும்புலியூர் ஊராட்சி. கரும்பாக்கம், மாம்பாக்கம்,காவணிப்பாக்கம், பேரணக்காவூர், சீத்தாவரம் உள்ளிட்ட கிராமங்கள் அரும்புலியூர் ஊராட்சியை உள்ளடங்கி உள்ளன.அரும்புலியூர் அருகில்பழவேரி ஊராட்சி உள்ளது. அரும்புலியூர், திடீர் நகர் பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன், துணை சுகாதார நிலையம் ஏற்படுத்தப்பட்டது.துவங்கப்பட்ட அடுத்த சில ஆண்டுகளில், போக்குவரத்து வசதியின்மை, மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறை உள்ளிட்ட நிர்வாக சீர்கேடு காரணங்களால் துணை சுகாதார நிலையம் மூடப்பட்டது.இதனால், அப்பகுதியினர், மருத்துவ தேவைக்கு படூர் அல்லது சீட்டணஞ்சேரி பகுதியில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருகின்றனர்.துணை சுகாதார நிலையம் செயல்படாமல் மூடப்பட்டு உள்ளதால், கர்ப்பிணியர் உள்ளிட்டோர் அவசர சிகிச்சைகள் உடனுக்குடன் பெற முடியாத நிலை உள்ளது.இந்த சுகாதார நிலையம்இயங்காததால், முறையான பராமரிப்பின்றி கட்டடத்தை சுற்றி புதர்கள் நிறைந்தும், மரங்கள் வளர்ந்தும் தற்போது அடையாளம் தெரியாமல் மறைந்துள்ளது.எனவே, அரும்புலியூர் துணை சுகாதார நிலையத்தை சீர்படுத்தி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை