மேலும் செய்திகள்
பயன்பாட்டிற்கு லாய்கற்ற பேரணக்காவூர் சாலை
24-Aug-2024
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், மதுார், சிறுமையிலுார், சித்தாலபாக்கம், சிறுதாமூர், பேரணக்காவூர் உள்ளிட்ட கிராமங்களில், தனியார் கல் குவாரிகள் மற்றும் எம்.சாண்ட், கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன.இந்த தொழிற்சாலைகளில் இருந்து, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு லோடு ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், அருங்குன்றம் கிராம சாலை வழியாக, இரவு, பகலாக தொடர்ந்து இயக்கப்படுகிறது.இதனால், மதுார் கூட்டுச்சாலையில் இருந்து, அருங்குன்றம் வரையிலான ஒரு கி.மீ., துாரத்திற்கான சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.மேலும், இச்சாலையில் தார்ப்பாய் போர்த்தாமல் இயங்கும் லோடு வாகனங்களால், ஜல்லிக்கற்கள் மற்றும் எம்.சாண்ட் மணல் சாலையில் படிந்து புழுதி பறந்த வண்ணம் உள்ளது.இதனால், இருசக்கரவாகன ஓட்டிகள்மற்றும் பாதசாரிகள் தினசரிஅவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, பழுதான அருங் குன்றம் சாலையை சீரமைப்பதோடு, அச்சாலையில் இயங்கும் லோடு வாகனங்கள் தார்ப்பாய் போர்த்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பலரும் வலியுறுத்திஉள்ளனர்.
24-Aug-2024