உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அத்தி வாராஹி கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

அத்தி வாராஹி கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், வேலாத்தம்மன் கோவில் தெருவில், புதிதாக அத்தி வாராஹி கோவில் கட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் காலை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. மாலை 5:00 மணிக்கு முதற்கால யாக பூஜை துவங்கியது.நேற்று, காலை 6:30 மணக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடும், 10:15 மணிக்கு, அருள்சித்தர் அகஸ்திய அன்புசெல்வன் முன்னிலையில், வேத விற்பன்னர்கள், கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் :ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.தொடர்நது வாராஹி மூலஸ்தானத்திற்கு கும்பாபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை