உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் கால்வாய் மோசம் தண்ணீர் செல்வதில் சிக்கல்

மழைநீர் கால்வாய் மோசம் தண்ணீர் செல்வதில் சிக்கல்

ஸ்ரீபெரும்புதுார்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளுள் ஸ்ரீபெரும்புதுார் ஏரியும் ஒன்று. இந்த ஏரி 675 ஏக்கர் பரப்பளவில், 235 மில்லியன் கன அடி கொள்ளவும், 17.60 அடி ஆழமும் கொண்டது.இந்த ஏரி நீரை பயன்படுத்தி, ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம், கடுவஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், 1,500 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது. மேலும், அப்பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக, இந்த ஏரி விளங்குகிறது.இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளில் இருந்து வெளியேறும் உணவு கழிவு, பிளாஸ்டிக் குப்பை உள்ளிட்டவை, மழைநீர் கால்வாய் மற்றும் விவசாய பாசன கால்வாயில் வீசுகின்றனர்.இதனால், கால்வாய் குப்பை சூழ்ந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும், மழை காலங்களில் மழைநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, பருவ மழைக்கு முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மழைநீர் கால்வாயை துார் வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி