மேலும் செய்திகள்
வட்டு எறிதல் போட்டி சங்கரா மாணவருக்கு பதக்கம்
3 hour(s) ago
உத்திரமேரூரில் வி.சி.,க்கள் சாலை மறியல்
3 hour(s) ago
வாலாஜாபாத்:காஞ்சிபுரம்- - செங்கல்பட்டு இருவழிச் சாலை, நான்குவழிச் சாலையாக மேம்படுத்தும் பணி நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் பாலாற்று படுகையில், சாலை அகலப்படுத்தும் பொருட்டு பாலம் கட்டுமான பணி நடைபெறுகிறது.பணி மேற்கொள்ளும் இப்பகுதிக்கு அருகே சாலை மிகவும் சேதமாகி பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இச்சாலை எதிரே நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பழுதான இச்சாலை வழியாக சென்று வர சிரமப்படுகின்றனர். மேலும் மழை நேரங்களில் சேதமான சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி காணப் படுகின்றன.இதனால், அச்சாலையில் அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. எனவே, பள்ளம் ஏற்பட்டுள்ள இச்சாலை பகுதியை சீரமைத்து விபத்து அபாயத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 hour(s) ago
3 hour(s) ago