உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையை ஆக்கிரமித்த மூங்கில் மரங்கள்

சாலையை ஆக்கிரமித்த மூங்கில் மரங்கள்

எடையார்பாக்கம், : எடையார்பாக்கம் - அக்கமாபுரம் - நாகப்பட்டு சாலை உள்ளது. இந்த சாலை, முதல்வர் சாலை விரிவாக்க திட்டத்தில், புதிய சாலை போட்டு உள்ளனர். இந்த சாலை ஓரம், சீமைக்கருவேல மரங்கள் மற்றும் மூங்கில் மரங்கள் புதர் மண்டிக் கிடக்கின்றன.குறிப்பாக, சாலையோரம் நடப்பட்டுள்ள மூங்கில் மரக்கிளைகள், ஆங்காங்கே பாதி சாலையை ஆக்கிரமித்து உள்ளன.இதனால், அந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்குசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கும் அபாயம் உள்ளது.எனவே, எடையார்பாக்கம் - அக்கமாபுரம் - நாகப்பட்டு சாலையோரம் இருக்கும் சீமைக் கருவேல மரங்கள் மற்றும் மூங்கில் புதர்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை