உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கேதாரீஸ்வரர் கோவிலை சுற்றி தடுப்பு வேலி அமைப்பு

கேதாரீஸ்வரர் கோவிலை சுற்றி தடுப்பு வேலி அமைப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் உள்ள காஞ்சிபுரம் சாலையில், மரகதாம்பிகை சமேத கேதாரீஸ்வரர் கோவில் உள்ளது.ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், பிரதோஷம், கேதாரகவுரி விரதம் ஆகிய நாட்களில், சிறப்பு வழிபாடு நடைபெறும். இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், கோவிலுக்கு முன் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், கருவாடு, இறைச்சி கடைகள் வைக்கப்பட்டு வந்தன. இந்த கடைகள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருந்து வந்தது.இதனால், கோவிலுக்கு முன் வைக்கப்படும் கடைகளை அகற்ற, தடுப்பு வேலி அமைக்க பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படி, கோவில் நிர்வாகத்தின் சார்பில், கோவிலுக்கு முன் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. தடுப்பு வேலி அமைக்கப்பட்டவுடன், கோவிலுக்கு முன் கடைகள் அமைப்பது முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை