உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்புச்சுவர் இல்லாத பென்னலுார் சிறுபாலம்

தடுப்புச்சுவர் இல்லாத பென்னலுார் சிறுபாலம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட பென்னலுார் ஊராட்சியில் 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியினர், பென்னலுார் வழியாக, ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையை இணைக்கும், பென்னலுார் பிரதான சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்களில் சென்று வருகின்றனர்.ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, காஞ்சிபுரம், குன்றத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுகளுக்கு நாள்தோறும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் இப்பகுதியினர் சென்று வருகின்றனர். தவிர, தனியார் பள்ளி, கல்லுாரி பேருந்துகள் அதிகம் செல்லும் சாலையாக இது உள்ளது.இந்த சாலையில், ராஜலட்சுமி மருத்துவ கல்லுாரி அருகே, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் உபரி நீர் கால்வாய்அமைந்துள்ளது.இந்த கால்வாய் மீது அமைந்துள்ள சிறுபாலத்தில் தடுப்பு இல்லை. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுப்பு இல்லாத பாலத்தின் மீது செல்லும் போது, விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.குறிப்பாக, இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் போது, எதிர்பாராத விதமாக உபரிநீர் கால்வாயில் விழுந்து விபத்தில்சிக்குகின்றனர்.எனவே, சிறு பாலத்தின்மீது தடுப்பு அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ