உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிறுபாலம் நீர்வழித்தடத்தில் மண் திட்டுகளால் அடைப்பு

சிறுபாலம் நீர்வழித்தடத்தில் மண் திட்டுகளால் அடைப்பு

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவிற்கும், கே.எம்.வி., நகருக்கும் இடையே உள்ள, வி.என்.பெருமாள் தெருவின் குறுக்கே மழைநீர் வெளியேறும் பகுதியில் சிறுபாலம் உள்ளது.மாநகராட்சி ஊழியர்கள் சிறுபாலத்தை முறையாக பராமரிக்காததால், சிறுபாலம் வழியாக மழை நீர் வெளியேறும், நீர்வழித்தட பகுதியில் மண் திட்டுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், மழை காலத்தில் சிறுபாலம் வழியாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் வி.என்.பெருமாள் தெருவில் உள்ள சிறுபாலத்தின் நீர்வழித்தட பாதையில் மண் திட்டுகளால் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி