விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் பெற அழைப்பு
காஞ்சிபுரம்:விளையாட்டு துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று, நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு, மாதம் 6,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ், www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.விண்ணப்பதாரர் குறைந்தபட்ச தகுதியாக சர்வதேச அல்லது தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது பங்கேற்று இருக்க வேண்டும்.தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில், பல்கலை இடையேயான போட்டி, ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றவராக இருக்க வேண்டும். 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்விண்ணப்பிக்க விரும்புபவர்கள், செப்., 1 முதல் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்தவர்கள், அடுத்த ஏழு நாட்களுக்குள் அசல் சான்றிதழ்களை, மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.