உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி - உத்திரமேரூர் சாலையில் விடுபட்ட இடங்களில் கால்வாய் பணி

காஞ்சி - உத்திரமேரூர் சாலையில் விடுபட்ட இடங்களில் கால்வாய் பணி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, வேளிங்கப்பட்டரையில் இருந்து ஓரிக்கை வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இதில், கால்வாய் கட்டுமான பணியின்போது, முக்கிய சாலை சந்திப்புகளில் வடிகால்வாய் கட்டுமானப் பணி விடுபட்டு இருந்தது. இதனால், மழைக்காலத்தில் இப்பகுதியில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே, விடுபட்ட கால்வாய் பணியை முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை சார்பில், வேளிங்கப்பட்டரையில் இருந்து ஓரிக்கை வரை விடுபட்ட இடங்களில் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதுகுறித்து, காஞ்சி புரம் நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் விஜய் கூறியதாவது:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, வேளிங்கப்பட்டரையில் இருந்துஓரிக்கை வரை 600மீட்டர் நீளத்திற்கு விடு பட்ட இடங்களிலும்,மாநகராட்சி சார்பில், அமைக்கப்பட்ட சிறிய கால்வாய் அகற்றப்பட்டு 1.50 மீட்டர் அகலம், 1.50 மீட்டர் ஆழத்திற்கு மூடி வசதியுடன் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது.காஞ்சிபுரத்தில் சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் பெய்யும் மழையால் கட்டுமானப் பணிக்கு இடையூறு ஏற்படுகிறது. இருப்பினும், வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் இப்பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ