மேலும் செய்திகள்
சாம்சங் தொழிலாளர்கள் குடும்பத்தினர் போராட்டம்
18-Feb-2025
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில், தொழிலாளர்களுக்கு நெருக்கடி அளிப்பதாக கூறி, தொழிற்சாலை நிர்வாக இயக்குனரை சந்திக்க அனுமதி கேட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மூவரை 'சஸ்பெண்ட்' செய்து நிர்வாகம் கடிதம் அளித்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் 20 பேர் என, மொத்தம் 23 பேரை 'சஸ்பெண்ட்' செய்து, சில நாட்களுக்கு முன் கடிதம் வழங்கியது.இவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். தொழிற்சாலையில் அனுபவம் இல்லாத பணியாளர்களை கொண்டு, சட்டவிரோத உற்பத்தியை தடுக்க வலியுறுத்தி, பணியாளர்களின் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதை தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலகத்தை முற்றுகையிட போவதாக, போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஸ்ரீபெரும்புதுார் அங்காள பரமேஸ்வரி கோவில் அருகே, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டனர். பேரணியாக சென்று மனு அளிக்க போலீசார் அனுமதி வழங்க மறுத்தனர். பின், முக்கிய நிர்வாகிகள் ஏழு பேரை மட்டும், ஸ்ரீபெரும்புதுார் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை ஆணையரை சந்திக்க அனுமதி அளித்தனர்.மூன்று நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணை ஆணையர் கடிதம் வழங்கியதை அடுத்து, தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
18-Feb-2025