உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மது அருந்த சென்றவருக்கு வெட்டு

மது அருந்த சென்றவருக்கு வெட்டு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஆரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கசெல்வம், 30; தனியார் நிறுவன ஊழியர்.இவர், நேற்று மாலை 6:00 மணி அளவில் அதே பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடையில் மது குடிக்க சென்று உள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத நான்கு நபர்கள், மாணிக்க செல்வத்திடம் வம்பிழுத்து, தலை மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் தாக்கியுள்ளனர்.காயமடைந்த மாணிக்கசெல்வம், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை முயற்சி குறித்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ