உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு

இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில், மாவட்ட தேசிய தகவல் மையம் சார்பில், இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்ட தேசிய தகவல் மையத்தின் உதவி அலுவலர் சரவணன், பல்வேறு தகவல் மையங்களிலிருந்து வரும் மோசடியான அழைப்புகளை தவிர்க்கும் வகையில், பாதுகாப்பாக நாம் வைத்துக் கொள்ள வேண்டிய தகவல்களை, பிறருக்கு பகிர்வதை தவிர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ரவீந்திரன், தேசிய மாணவர் படை அலுவலர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் முகாமில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !