உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பக்தர்களின் உடைமை அறை பயன்பாட்டிற்கு வராமல் வீண்

பக்தர்களின் உடைமை அறை பயன்பாட்டிற்கு வராமல் வீண்

காஞ்சிபுரம்:மத்திய அரசு, 2014ல், காஞ்சிபுரத்தை பாரம்பரிய நகரமாக அறிவித்தது. தொடர்ந்து, புராதன நகர மேம்பாடு மற்றும் புனரமைப்பு திட்டத்தின்கீழ், காஞ்சிபுரத்தில் உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள, 23.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.இத்திட்டத்தின் கீழ், ஒரு பகுதியாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் அருகில், பக்தர்களின் உடைமைகள் பாதுகாப்பு அறை, உதவி மையம் அறை கட்டப்பட்டது.கட்டுமானப் பணி முடிந்து ஐந்து ஆண்டுளுக்கு மேலாகியும் பக்தர்களின் உடைமைகள் பாதுகாப்பு அறை பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் மூடியே கிடக்கிறது.இதனால், இக்கட்டடம் பயன்பாட்டிற்கு வராமலேயே பொலிவிழந்து வீணாகி வருகிறது. எனவே, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட உடைமைகள் பாதுகாப்பு அறை மற்றும் உதவி மையத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் கூறுகையில், ''காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் உடைமைகள் பாதுகாப்பு அறை மற்றும் உதவி மையத்தை இன்று நேரில் சென்று ஆய்வு செய்து, கட்டடத்தை திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை