உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆசிரியை பற்றி அநாகரிகமான பேச்சு கல்வி அதிகாரியை கண்டித்து தர்ணா

ஆசிரியை பற்றி அநாகரிகமான பேச்சு கல்வி அதிகாரியை கண்டித்து தர்ணா

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும்' பயிற்சி முகாம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் குன்றத்துாரில் இரு கட்டங்களாக நடந்தது.காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் கந்தவேல், இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஒருங்கிணைப்பாளாராக செயல்பட்டார்.இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் கந்தவேல், ஆசிரியர்களுக்கான 'வாட்ஸாப்' குழு ஒன்றில், பெண் ஆசிரியர் ஒருவர் குறித்து தரக்குறைவாக பேசி பதிவிட்டிருந்தார். அவரது பதிவிற்கு, ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிப்பு கிளம்பியது.இதனால், எண்ணும் எழுத்தும் முகாமின் கடைசி நாளான நேற்று, பயிற்சியை புறக்கணித்த ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், காஞ்சிபுரம் பகுதி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர் கந்தவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் தமிழ்செல்விக்கு, கடிதம் அனுப்பினர்.இதையடுத்து அவர், ஒருங்கிணைப்பாளர் கந்தவேல் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனருக்கு பரிந்துரை செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி