| ADDED : ஆக 18, 2024 12:12 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூரில், எல்.எண்டத்துார் சாலையில் நுாக்காலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நடப்பாண்டிற்கான ஆடி மாதம் தீமிதி திருவிழா நடந்தது.காலையில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையை தொடர்ந்து, நங்கையர் குளத்தில் இருந்து ஜலம் திரட்டி, பஜார் வீதி வழியாக கோவில் வந்தடைந்தது.அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு கோவில் எதிரில் அக்னி குண்டம் அமைத்து, தீமிதி விழா நடந்தது. இதில், விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.