காட்டரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு
இருங்காட்டுக்கோட்டை:ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டையில் சிப்காட் தொழிற்பூங்கா அமைந்துள்ளது. இங்கு கார் மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரிக்கும், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள்இயங்குகின்றன.இங்குள்ள தொழிற்சாலைகளில் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் என விதி உள்ளது. ஆனாலும், சில தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் நேரடியாக மழைநீர் வடிகால்வாயில் விடப்படுகிறது.இதனால், கால்வாய் முழுதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும், மழை காலத்தில் இந்த கழிவுநீர் அடித்து செல்லப்பட்டு, அருகே உள்ள காட்டரம்பாக்கம் ஏரி, கீவளூர் ஏரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் கலப் பதால் ஏரி நீர் மாசடைகிறது.கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.