உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்வாரிய அலட்சியம் வாலிபர் உயிரிழப்பு

மின்வாரிய அலட்சியம் வாலிபர் உயிரிழப்பு

திருநின்றவூர், : திருநின்றவூர் அடுத்த பாக்கம், ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 32; பசு மாடு வளர்த்து வந்தார். திருமணமாகாத இவர், தாய் லட்சுமி, 60, உடன் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை அவரது பசுமாடு ஒன்று, பாக்கம் அருகே கசுவா என்ற கிராமத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. பசுமாட்டை அழைத்து வர சென்றபோது, பிரகாஷின் கைகள் விவசாய நிலத்தில் தாழ்வாக தொங்கிய மின் கம்பி மீது உரசியதாகக் கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில், அவர் இறந்தது தெரிந்தது. திருநின்றவூர்போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மின் வாரியம் அலட்சியம்

விவசாய நிலத்தில் மின் கம்பி தாழ்வாக செல்வதாக, பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.மின்வாரியத்தின் அலட்சியத்தால் வாலிபர் உயிரிழந்ததைக் கண்டித்து, பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், பகுதிவாசிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சலசலப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை