உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாஜி அரசு அலுவலர்கள் குறைதீர் கூட்டம் செப்.,17க்குள் மனு அளிக்க அழைப்பு

மாஜி அரசு அலுவலர்கள் குறைதீர் கூட்டம் செப்.,17க்குள் மனு அளிக்க அழைப்பு

காஞ்சிபுரம்:ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான குறைதீர் கூட்டம், அக்.,4ம் தேதி, காலை 10:30 மணிக்கு, கலெக்டர் வளாகததில், மாவட்ட கலெக்டர் மற்றும் மாநில ஓய்வூதிய இயக்குனர் ஆகியோரால் நடத்தப்பட உள்ளது.ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின், அதற்கான முறையீட்டு மனுவை, மூன்று நகல்களில், செப்.,17ம் தேதிக்குள், காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இக்கூட்டத்தில், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் சங்கங்கள் சார்பில், ஒருவர் மட்டுமே பங்கேற்கலாம்.மேலும், செப்.,17க்குள் பெறப்படும் முறையீட்டு மனுக்கள் மீது குறைகளைவு அறிக்கை, சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து பெற்று, கூட்டம் நடக்கும் நாளில் நடவடிக்கை விபரம் தெரிவிக்கப்படும்.எனவே, ஓய்வூதியர்கள் தங்களது முறையீடுகளை, குறிப்பிட்ட நாளுக்குள் அனுப்ப வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ