உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தொழிற்பயிற்சியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

தொழிற்பயிற்சியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், 2024- - 25ம் கல்வியாண்டிற்கான மாணவ சேர்க்கை, மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது.எட்டாம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.தமிழக அரசின் www.skilltrainint.tn.gov.inஎன்ற இணையதளத்தில், கடந்த மே 10ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் பெற ஜூன் 7ம் தேதி கடைசி தேதி என, அறிவிக்கப்பட்டு இருந்தது.தற்போது, 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, ஒரகடத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகலாம்.மாணவர்கள், 97892 42292, 94999 37449 என்ற மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை