உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளி, விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு திடீர் மழையால் விவசாயிகள் கவலை

பள்ளி, விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு திடீர் மழையால் விவசாயிகள் கவலை

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் பெய்த மழையால், பள்ளி, சாலை, விளை நிலங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கின்றன. திடீர் மழையால், விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்நிலையில், மகசூல் பாதிக்கப்படும் என விவசாயிகள் புலம்புகின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட, கச்சிப்பட்டு பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து, பள்ளி வளாகத்தில் குளம் போல தேங்கியது.இதனால், நேற்று காலை, பள்ளிக்கு வந்த மாணவ - மாணவியர் கடும் அவதி அடைந்தனர். குளம் போல் தேங்கிய நீரில், நடந்து மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர். மேலும், மாணவர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்தவாறு வகுப்பறையில் விட்டு சென்றனர்.பள்ளி வளாகத்தில்தேங்கிய மழைநீரில்,கழிவுநீரும் கலந்துள்ளதால், கொசுக்கள் உற்பத்தியாவதோடு, பாம்பு, பூச்சி போன்ற விஷஜந்துக்கள் அபாயம் உள்ளதால், மாணவர்களின் பெற்றோர் சிலர், குழந்தைகளை மீண்டும் வீட்டிற்கு அழைத்துசென்றனர்.எனவே, இனி வரும் காலங்களில் மாணவர்களின் நலன் கருதி, பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என,பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

ரயில் நிலையசாலையில்...

காஞ்சிபுரம் அடுத்து,நத்தப்பேட்டை ரயில் நிலையம் உள்ளது.இங்கிருந்து செங்கல்பட்டு, அரக்கோணம் மார்கத்தில் செல்லும் ரயிலில் தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர்பயணித்து வருகின்றனர்.ரயில் நிலையத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால், மண் சாலையாக உள்ளதால், பள்ளம் உள்ள இடத்தில் மழைநீர்குட்டைபோல தேங்கியுள்ளது.இதனால், ரயில் நிலையத்திற்கு சென்று வரும் பயணியர் மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.குறிப்பாக, இரவு நேரத்தில், விஷஜந்துக்கள் நட மாட்டம் இருக்கும் என்பதால், பெண்கள் இச்சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர்.எனவே, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள நத்தப்பேட்டை ரயில் நிலையத்திற்கு செல்லும் மண் சாலைக்கு, புதிதாக சிமென்ட் சாலை அமைக்கவும், போதுமான அளவு மின்விளக்கு வசதி ஏற்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில்பயணியர் வலியுறுத்திஉள்ளனர்.

கரும்புத் தோட்டம்

உத்திரமேரூர் ஒன்றியத்தில், சீட்டணஞ்சேரி, சாத்தணஞ்சேரி, பினாயூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், கரும்பு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கரும்பு கள், மதுராந்தகம் அடுத்த படாளத்தில் இயங்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அர வைக்குஅனுப்புகின்றனர்.இப்பகுதிகளில் பயிரிட்டுள்ள கரும்புகள், நன்றாக வளர்ந்துள்ள நிலையில், சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில், தென்மேற்கு பருவ மழை பெய்துவருகிறது.நேற்று முன்தினம் இரவு, காற்றுடன் பெய்த கன மழையால், சாத்தணஞ்சேரி சுற்றுவட்டார கிராம கரும்பு தோட்டங்களில் அதிக அளவில் மழை நீர் தேங்கி உள்ளது.தொடர்ந்து மழை பெய்தால், தோட்டங்களில் ஈரபசை அதிகரித்து மகசூல் பாதிக்கக்கூடும் என, விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.இதுகுறித்து,சாத்தணஞ்சேரி கரும்பு விவசாயிகள் தனபால் கூறியதாவது:உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில், முதல் பட்டம் மற்றும் இரண்டாம் பட்ட சாகுபடி கரும்புகள் தற்போது, செழிமையாக வளர்ந்தும் சில இடங்களில் இளங்கரும்பாகவும் உள்ளன.இந்நிலையில்,இப்பகுதிகளில் சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. தோட்டங்களில் தொடர்ந்து மழைநீர் தேங்குவதால் கரும்புகளின் வேர் பகுதிக்கு காற்றோட்டம் இல்லாமல் கரும்பின் வளர்ச்சியை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சோகையில் தண்ணீர் தேங்கி, கனு பகுதிகளில் முளைப்பு ஏற்படக்கூடும். இதனால், கரும்புகளின் தரம் மற்றும் எடை குறைவதோடு மகசூல் குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.- நமது நிருபர்கள் குழு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ