மேலும் செய்திகள்
குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி பலி
30-Sep-2025
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு
30-Sep-2025
ஆண்டிற்கு ஒரு லட்சம் பனை விதைகள் நடவு விழா
30-Sep-2025
விவசாயிகள் கடன் பெறும் வழிமுறை விளக்க கூட்டம்
30-Sep-2025
ராயபுரம் : ராயபுரம் காவல் நிலைய குற்றப்பிரிவு காவலராக பணியாற்றியவர் பிரியங்கா, 27. அதே காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த சேகர், 30, என்பவரை, இரண்டு ஆண்டுகளாக காதலித்து, ஜன., 24ல் திருமணம் செய்தார்.ராயபுரம், தம்பு லைன் காவலர் குடியிருப்பில் வசித்த தம்பதி இடையே, அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 31ம் தேதி மதியம் ஏற்பட்ட சண்டையில் கணவர் சேகர், வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் வரவேற்பறை மின் விசிறியில் நைலான் துணியில் துாக்கிட்டு, பிரியங்கா தற்கொலை செய்தார். இந்நிலையில், பிரியங்காவின் தாய் கலைவாணி, தன் மகள் சாவில் மர்மம் இருப்பதாக, ராயபுரம் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, பிரியங்காவை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில், கணவர் சேகரை நேற்று, போலீசார் கைது செய்தனர்.
30-Sep-2025
30-Sep-2025
30-Sep-2025
30-Sep-2025