காஞ்சி சங்கரா கல்லுாரியில் நாட்டுப்புறவியல் கண்காட்சி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏனாத்துாரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ்த்துறையில் மூன்றாமாண்டு பயிலும் மாணவ- - -மாணவியர் சார்பில் நாட்டுப்புறவியல் பாடத்திட்டத்தின் கீழ், செயல்வழி தேர்வுக்கான பணியாக நாட்டுப்புறவியல் கண்காட்சி நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன்தலைமை வகித்தார் தமிழ்த்துறை தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை சன் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் செந்தில்வேலன் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.கண்காட்சியில் நாட்டுப்புற தெய்வங்கள், வழி பாட்டு முறைகள், தமிழர் களின் பழக்க வழக்கங்கள்,பாரம்பரிய உணவு வகைகள், பழம்பெரும் விளையாட்டுக்கள், இசைக் கருவி கள், சிற்பக்கலை, பாரம்பரிய வீட்டு பொருட்கள்உள்ளிட்டவை காட்சிப் படுத்தப்பட்டு இருந்தன.