| ADDED : ஜூலை 09, 2024 04:20 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் சேகரமாகும் குப்பை, திருவீதிபள்ளத்தில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு லாரிகள் வாயிலாக எடுத்துச் செல்லப்படுகின்றன.குப்பை ஏற்றி செல்லும் லாரிகள், வலை அல்லது தார்ப்பாய் போட்டு மூடி செல்ல வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.ஆனால், பெரும்பாலான லாரி ஓட்டுனர்கள், அதிகாரிகளின் உத்தரவை பின்பற்றுவதில்லை.இதனால், அளவுக்கு அதிகமாக குப்பை ஏற்றிச் செல்லும் லாரிகளில் இருந்து, சாலையில் சிதறும் குப்பை, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் மீது விழுகிறது.அதேபோல, மேடு பள்ளங்களில் லாரி ஏறி இறங்கும்போது, குப்பை மூட்டை சரிந்து வாகன ஓட்டிகளின் மீது விழுவதால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.மேலும், காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.எனவே, குப்பை ஏற்றிச் செல்லும் மாநகராட்சி லாரிகள், முறையாக வலை அல்லது தார்ப்பாயால் மூடப்பட்டு செல்கிறதா என்பதை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.