உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சங்கரா கல்லுாரியில் மரபிசை பயிலரங்கம்

சங்கரா கல்லுாரியில் மரபிசை பயிலரங்கம்

காஞ்சிபுரம்:காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகளின் ஆராதனை மகோத்சவம், காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கடந்த 10ம் தேதி துவங்கியது. இதில், முதல் நாள் நிகழ்ச்சியில், பரத நாட்டிய நிகழ்ச்சியும், ஜயேந்திரரின் சமயபணிகள் மற்றும் சமுதாயப் பணிகள் குறித்த கருத்தரங்கமும், சமயப்பணிகள் மற்றும் சமுதாயப்பணிகள் ஆற்றிவரும் அமைப்புகள் மற்றும் ஆளுமைகளுக்கு விருது வழங்கப்பட்டன. 'அகத்தியர் அகராதி, சேக்கிழார் சொன்னதும் சொல்லாததும்' ஆகிய இரண்டு நுால்கள் வெளியீட்டு விழா நடந்தன.இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, காஞ்சிபுரம், ஏனாத்துார் பகுதிகளில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.மூன்றாம் நாளான நேற்று, கிராமப்புற தொழில்முனைவோருக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் முழுநாள் மரபிசை பயிலரங்கம் கல்லுாரி முதல்வர் முனைவர் கலைராம வெங்கடேசன் தலைமையில் நடந்தது.இதில், திருச்சி, கலைக்காவிரி நுண்கலைக் கல்லுாரி இசைத் துறை பேராசிரியர்கள் முனைவர் உமா மகேஸ்வரி, முனைவர் பானுமதி ஆகியோர் சங்கீத அடிப்படைகள், கார்நாடக சங்கீத மும்மூர்த்திகள், தமிழிசை மும்மூர்த்திகள், தற்காலத் தமிழிசைப் பாடல்கள் பாடுவதற்கு பயிற்சி அளித்தனர்.தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். தெய்வசிகாமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை