உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அவளூரில் கிராம வங்கி துவக்கம்

அவளூரில் கிராம வங்கி துவக்கம்

வாலாஜாபாத்,:இந்தியன் வங்கியின் நிதி உதவியுடன், தமிழ்நாடு கிராம வங்கி பல்வேறு பகுதிகளில் செயல்படுகிறது. எளிமையான முறைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எளிதாக சேவை செய்யத்தக்க வகையில் இந்த வங்கிகள் இயங்குகின்றன.இதன் ஒரு பகுதியாக வாலாஜாபாத் ஒன்றியம், அவளூர் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னடியன் குடிசை கிராமத்தில் நேற்று, தமிழ்நாடு கிராம வங்கி கிளை துவக்க விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பெட்டியை திறந்து வைத்தார்.கிளை மேலாளர் விக்னேஷ், வட்டார மேலாளர் ஹம்குமார், பொது மேலாளர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை