உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மானாம்பதி விளையாட்டு பூங்காவில் உபகரணங்களை சீரமைக்க வலியுறுத்தல்

மானாம்பதி விளையாட்டு பூங்காவில் உபகரணங்களை சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி ஊராட்சியில், 2018 - 19ம் நிதியாண்டு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 15 லட்சம் ரூபாய் செலவில், சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது.முறையான பராமரிப்பு இல்லாததால், பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு உபகரணங்களான ஏணி விளையாட்டு, ஊஞ்சல், சீசா உள்ளிட்ட உபகரணங்கள், அமரும் இருக்கை, மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன.நடைபாதையில் பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது. இதனால், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.எனவே, சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்காவை முழுதும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மானாம்பதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ