உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, கனக துர்கையம்மன் நகர், செந்தமிழ் நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நகருக்கு செல்வோர் கே.ஏ.கே., சாலை வழியாக சென்று வருகின்றனர்.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கே.ஏ.கே., சாலையில் போடப்பட்ட சிமென்ட் சாலை சேதமடைந்து, ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மழைகாலங்களில் சாலையில் பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால், இச்சாலையில் செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவ- - மாணவியர் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி சகதி நீரில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.மேலும், நாள் கணக்கில் தேங்கும் மழைநீரால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள கே.ஏ.கே., சாலைக்கு புதிதாக சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி