உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்பணைக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தல்

தடுப்பணைக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நேற்று நடந்தது.வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டகலை துறை, கூட்டுறவு துறை, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், விவசாயிகளுக்கு பவர்டில்லர், வேளாண் உபகரணங்கள், பவர் வீடர், பயிர் கடன் என, 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, 11 விவசாயிகளுக்கு கலெக்டர்வழங்கினார்.இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தங்களுக்கு பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு தொகை சரிவர வரவில்லை என குற்றஞ்சாட்டினர். விவசாய சங்க பிரதிநிதிகள் சார்பில், தமிழக பட்ஜெட்டில் காஞ்சிபுரம் மாவட்ட பாலாற்றில் இரு தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர்.மேலும், நீர்வளத்துறைக்கு வழங்கப்படும் மனுக்களுக்கு சரியான நடவடிக்கை இல்லை எனவும், வெங்கச்சேரி அணைக்கட்டில் ஏற்பட்ட பாதிப்பு சரிசெய்யப்படவில்லை எனவும், காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல சரியான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படவில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.இதில், வேளாண் இணை இயக்குனர் முருகன், வேளாண்மை துணை இயக்குனர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி