உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மஞ்சள்நீர் கால்வாய் கட்டுமான பணி சாலை தடுப்பு அமைக்க வலியுறுத்தல்

மஞ்சள்நீர் கால்வாய் கட்டுமான பணி சாலை தடுப்பு அமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், மன்னர்கள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட, மஞ்சள்நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகே உள்ள, புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.இக்கால்வாய் மீது, 40 கோடி ரூபாய் செலவில், கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. இதில், ஒரு பகுதியாக ஆனந்தாபேட்டையில் திருக்காலிமேடு செல்லும் பிரதான சாலையோரம் உள்ள மஞ்சள்நீர் கால்வாயில் பக்கவாட்டு சுவர் அமைக்க அடித்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில், பள்ளம் உள்ளதாலும், கம்பிகள் நீண்டு உள்ளதாலும், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை. சாலையோரம் தடுப்பும் அமைக்கவில்லை.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், இரவு நேரத்தில் வேகமாக செல்லும் வாகனங்கள் கால்வாய் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் சாலையோரம் ஒதுங்கும்போது, கம்பியில் இடித்துக் கொண்டும், நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்தும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, மஞ்சள்நீர் கால்வாயில் கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில், விபத்தை தவிர்க்கும் வகையில், சாலையோரம் இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை