மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
6 hour(s) ago
மின்விளக்கு வசதி இல்லாத கருங்குட்டை சுடுகாடு
6 hour(s) ago
சென்னை : அமைந்தகரை அடுத்த செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சில தினங்களுக்கு முன் அமைந்தகரை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெரவள்ளுரை சேர்ந்த லோகேஷ், 23 என்பவர் தடை செய்யப்பட்ட கொக்கைன் போதை பொருளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 120 கிராம் கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் லோகேஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அமைந்தகரை போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, ஐந்து நாட்கள் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, லோகேசை ரகசிய இடத்திற்கு அமைந்தகரை போலீசார் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago