மாநில கிரிக்கெட் போட்டி பைனலில் காஞ்சி ஏமாற்றம்
காஞ்சிபுரம், கும்பகோணம் 'ரோஹித் சர்மா கிரிக்கெட்' அகாடமி சார்பில், 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் லீக் தொடர் கும்பகோணம் அல் ஹமீன் பள்ளி மைதானத்தில் நடந்தது.கும்பகோணம், திருச்சி, தஞ்சாவூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டிக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணியும், கும்பகோணம் 'கிரிக் கிங்டம்' அணியும் தகுதி பெற்றன.இறுதி போட்டியில் 'டாஸ்' வென்ற கும்பகோணம் அணியினர், 25 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு, 156 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய காஞ்சிபுரம் அணியினர் 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 86 ரன்கள் வித்தியாசத்தில் கும்பகோணம் அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது.