உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செடி, கொடிகள் வளர்ந்துள்ள காஞ்சி விளையாட்டு அரங்கம்

செடி, கொடிகள் வளர்ந்துள்ள காஞ்சி விளையாட்டு அரங்கம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட விளையாட்டு அரங்கம் இயங்கி வருகிறது. இங்கு காலை, மாலையில், ஆயிரக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பல்வேறு பிரிவு விளையாட்டு வீரர்கள், வீராங்கனையர் தங்களது விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தை ஒட்டியுள்ள பகுதியில், செடி, கொடிகள் அதிகஅளவில் வளர்ந்துள்ளன.இதனால், விஷ ஜந்துக்கள் உலாவும்போது, விளையாட்டு அரங்கத்திற்கு வந்து செல்லும் வீரர்களுக்கும், வீராங்கனையர் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உள்ளது.கடந்த 2022ம் ஆண்டு, மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளம் அருகில் மண்டிக்கிடந்த செடிகளில்,இரு பாம்புகள் பின்னி பிணைந்து நடனமாடிய வீடியோ வாட்ஸாப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.எனவே, பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் வந்து செல்லும், பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அருகில், விஷஜந்துக்களின் புகலிடம்போல, அதிகளவில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை