உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிறு மழைக்கே சேதமடைந்த காவூர் - காவிதண்டலம் சாலை

சிறு மழைக்கே சேதமடைந்த காவூர் - காவிதண்டலம் சாலை

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், காவூரில் இருந்து, காவிதண்டலம் கிராமத்திற்கு செல்லும் ஒரு கி.மீ., தூரம் கொண்ட இணைப்பு சாலை உள்ளது. அப்பகுதியினர் தங்களது விவசாய நிலங்களுக்கு டிராக்டர், மாட்டு வண்டி, டில்லர் மிஷன் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த வாகனங்களை இச்சாலை வழியாக இயக்கி செல்கின்றனர்.இரு கிராமங்களுக்கான இந்த போக்குவரத்து சாலை பழுதடைந்து காணப்படுகிறது.இதனால், இச்சாலையில் நெல் மற்றும் கரும்பு அறுவடை போன்ற இயந்திரங்களை இயக்குவதில் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.மேலும், மழை நேரங்களில் பழுதான இச்சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சேறாக காணப் படுகிறது. இதனால்,அச்சமயங்களில் அந்த சாலை வழியாக இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே, காவூர் காவிதண்டலம்இணைப்பு சாலையை சீரமைத்து அகலப்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை