உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கெருகம்பாக்கம் தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

கெருகம்பாக்கம் தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

குன்றத்துார்:குன்றத்துாரில், தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் நேற்று விடுக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை, மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் லாலாஜி மெமோரியல் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. பள்ளிக்கு நேற்று, வழக்கம்போல் ஏராளமான மாணவ - மாணவியர் வந்தனர்.இந்நிலையில், பள்ளிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக, மர்ம நபரிடம் இருந்து பள்ளியின் இ-------மெயில் முகவரிக்கு நேற்று, மிரட்டல் வந்தது. பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக மாங்காடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, ஆவடி காவல் ஆணையகரத்தில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் பள்ளிக்கு விரைந்தனர். வகுப்பறை, வளாகம், கழிப்பறை உள்ளிட்ட இடங்களில் தீவிர ஆய்வு நடத்தினர். வெடிகுண்டு எதுவும் சிக்காததால், மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.இதுகுறித்து, மாங்காடு போலீசார் வழக்கு பதிந்து, பள்ளிக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர் பற்றி விசாரிக்கின்றனர்.இதற்கிடையே, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தை அறிந்த பெற்றோர், பள்ளிக்கு விரைந்து வந்து, மாணவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து சென்றனர். கெருகம்பாக்கத்தில் உள்ள பி.எஸ்.பி.பி., மில்லினியம் என்ற தனியார் பள்ளிக்கு, சில மாதங்களுக்கு முன், ஏற்கனவே இருமுறை இ--மெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ