உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி, செங்கை, திருவள்ளூரில் 93,700 விவசாயிகளுக்கு கிசான் நிதி

காஞ்சி, செங்கை, திருவள்ளூரில் 93,700 விவசாயிகளுக்கு கிசான் நிதி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், 1.50 லட்சம் விவசாயிகள் உள்ளனர். விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, பிரதமரின் கவுரவ உதவித்தொகை, மானியத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள், வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்கி மத்திய, மாநில அரசு ஊக்குவித்து வருகிறது.மத்திய அரசு வழங்கும், பிரதமர் கவுரவ உதவித்தொகை விவசாயிகள் அல்லாத வேறு நபர்களுக்கு சென்றுவிடக்கூடாது என, இணைய வழியில் பதிவு செய்து, மத்திய அரசு கவுரவ நிதி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கி வருகிறது.அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில், 24,537 விவசாயிகள். திருவள்ளூர் மாவட்டத்தில், 41,973 விவசாயிகள். செங்கல்பட்டு மாவட்டத்தில், 27,190 விவசாயிகள் என மொத்தம், 93,700 விவசாயிகள் பிரதமரின் கவுரவ உதவி தொகை பெறுகின்றனர்.விவசாயிகளுக்கு, 56.21 கோடி ரூபாய், ஆண்டுதோறும் மூன்று கட்டங்களாக பிரித்து, மத்திய அரசு அவரவர் வங்கி கணக்கில் விடுவித்து வருகிறது. கடந்த 2019ல் துவங்கிய திட்டத்தில் இதுவரை விவசாயிகளுக்கு 19 தவணைகளாக தலா 2,000 ஆயிரம் ரூபாய் வீதம் 38,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பிரதமர் கவுரவ நிதி பெறும் விவசாயிகள், 20வது தவணை பெறுவதற்கு கட்டயமாக தேசிய வேளாண் அடையாள அட்டை எண் பெற வரும் 31ம் தேதிக்குள் பொது சேவை மையங்களில் தங்கள் பட்டா, சிட்டா, நில ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு, ஆதார் அட்டை போன்ற விபரங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும் என, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை