உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காளிகாம்பாள் கோவிலில் வரும் 12ல் கும்பாபிஷேகம்

காளிகாம்பாள் கோவிலில் வரும் 12ல் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், ஆதிகாமாட்சி என அழைக்கப்படும் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, 2022ம் ஆண்டு, செப்., 1ம் தேதி பாலாலயம் நடந்தது.தொடர்ந்து கோவில் உட்புறம் மற்றும் வெளிப்பிரகாரத்தில் கருங்கல் தரைதளம் அமைத்தல், மஹா மண்டபத்தின் மேல்தளத்தில் ஓடுகள் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் 1 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடந்து வருகிறது.கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு தேவதா அனுக்ஞை, கோபூஜை, தீப சண்டி ஸப்தசதி பாராயணம் உள்ளிட்டவை நடந்தது. இன்று மாலை 4:00 மணிக்கு முதற்கால யாக பூஜை நடக்கிறது. நாளை காலை 6:00 மணிக்கு ஏகாம்பரநாதர் கோவிலில் விசேஷ சந்தி, நகர பிரதட்சணம், இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது.ஜூன் 12ம் தேதி காலை 6:00 மணிக்கு கலச புறப்பாடும், 6:30 மணிக்கு கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.தொடர்ந்து பரிவார சன்னிதி, மூலவர் அம்பாள், ஆதிகாமாட்சிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.காலை 11:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மாலை 6:30 மணிக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில், ஆதிகாமாட்சியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலாசெல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ