| ADDED : ஆக 14, 2024 09:34 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் என்பவர், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம், தொழிற்சாலைக்காக நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக மனு அளித்தார்.மனு விபரம்:பழவேரி கிராமத்தில், 15 ஏக்கர் நிலத்தில் தோட்ட பயிரான மா, கொய்யா, சப்போட்டா மற்றும் தென்னை மரங்கள் வைத்து பல ஆண்டுகளாக பராமரித்து வருகிறேன்.இந்நிலையில், என் நிலத்திற்கு அருகே உள்ள மற்றொரு விவசாயி, தன், 4 ஏக்கர் விவசாய நிலத்தை கல் குவாரிக்காக தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்து விட்டார்.இந்நிலையில், அந்நிலங்களில் பராமரிப்பு பணி செய்வதாக தனியார் நிறுவனத்தினர், எனக்கு சொந்தமான நிலப் பகுதியில், முறையாக சர்வே செய்யாமல் வேலிகளை அகற்றியும், தோட்ட பயிர்களை சேதப்படுத்தியும் ஆக்கிரமித்துள்ளனர்.எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.