மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
24-Aug-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள மஹா சுவாமிகள் மணி மண்டப வளாகத்தில் நான்காவது ஆண்டு சட்ட வல்லுனர்கள் கருத்தரங்கம் நேற்று நடந்தது. காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்து கருத்தரங்கை துவக்கி வைத்தார்.கருத்தரங்கில் இந்திய அரசின் அட்டர்னி ஜென்டிரல் ஆர்.வெங்கட்ரமணி, மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், டி.ஆர்.ராஜகோபால், எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பலர் சிறப்புரையாற்றினர்.மூத்த வழக்கறிஞர்கள் வினோத்கண்ணா, மலையூர் புருஷோத்தமன், ஆலய வழிபாட்டுக் குழுவின் தலைவரும், வழக்குகறிஞருமான டி.ஆர்.ரமேஷ் உட்பட புதுடெல்லி, சென்னை, கேரளா ஆகிய பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.முன்னதாக சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் தலைமையில் வழக்கறிஞர்கள் குழுவினர் ஒரிக்கை மணிமண்டப வளாகத்தில் கருத்தரங்கில் பங்கேற்க வந்த காஞ்சி சங்கராசாரியார் சுவாமிகளுக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வழக்கறிஞர் கிருஷ்ணசாமி தலைமையிலான வழக்கறிஞர்கள் குழுவினர் செய்திருந்தனர்.
24-Aug-2024