மேலும் செய்திகள்
கொள்முதல் நிலையத்தில் 7,000 நெல் மூட்டைகள் தேக்கம்
5 hour(s) ago
அலுவலக உதவியாளர் பணி 5 பேருக்கு 734 பேர் போட்டி
7 hour(s) ago
இன்று இனிதாக .... (11.10.2025) காஞ்சிபுரம்
10 hour(s) ago
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில், கட்டுப்பாட்டை இழந்த லோடு வேன் மோதியதால், அப்பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை மின்சாரம் இன்றி மக்கள் அவதியடைந்தனர்.ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்று காலை ஒரகடத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் நோக்கி, 'டாடா ஏஸ்' லோடு வேன் சென்று கொண்டிருந்தது.சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு அருகே வந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது.இதில், மின்கம்பம் முற்றிலும் உடைந்து, மின் ஒயர்கள் துண்டானது. இந்த விபத்தில், லோடு வேனை ஓட்டி வந்த டிரைவர் சிறு காயங்களுடன் உயர் தப்பினார்.இதனால், வி.ஆர்.பி.சத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், காலை 7:00 மணி முதல் மாலை வரை ஏற்பட்ட மின் தடையால் அப்பகுதிவாசிகள் அவதி அடைந்தனர்.இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் மின்வாரிய ஊழியர்கள், சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
5 hour(s) ago
7 hour(s) ago
10 hour(s) ago