உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குன்றத்துாரில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்

குன்றத்துாரில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்

காஞ்சிபுரம்:தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின்கீழ், ஒவ்வொரு மாதமும், தாலுகா அளவில், மாவட்ட கலெக்டர் தங்கி, அரசு திட்டங்களை ஆய்வு செய்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.ஜூலை மாதத்திற்கான, 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், குன்றத்துார் தாலுகா தேர்வு செய்யப்பட்டுள்ளது.வரும் 24ம் தேதி, இத்திட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க விரும்புவோர், குன்றத்துார் தாலுகா அலுவலகத்தில், மாலை 4:30 மணி முதல், 6:00 மணி வரை வழங்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ