உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாழ்வாக செல்லும் மின்ஒயர்கள் மேட்டுபாளையத்தில் விபத்து அபாயம்

தாழ்வாக செல்லும் மின்ஒயர்கள் மேட்டுபாளையத்தில் விபத்து அபாயம்

நரப்பாக்கம், : காஞ்சிபுரம் ஒன்றியம், நரப்பாக்கம் ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராம சாலையோரம் அப்பகுதியில் உள்ள வீடுகள், விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்க மின்வழித்தட பாதைக்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், சாலை வளைவு பகுதியில் இரு மின்கம்பங்களுக்கு இடையே மின் ஒயர்கள் தாழ்வாக செல்கின்றன. இதனால், கனரக வாகனங்கள் எதிரெதிரே இச்சாலையில் செல்லும்போது, வைக்கோல் ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள் மின் ஒயரில் உரசி மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, தாழ்வாக செல்லும் மின்ஒயர்களை சீரமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை