மேலும் செய்திகள்
கச்சபேஸ்வரர் கோவிலில் மாவிளக்கு எடுத்த பக்தர்கள்
6 hour(s) ago
சென்னை: நாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலையும், பார்லிமென்ட் சட்டம், மாநில அளவிலான சட்டம், தனியார் பல்கலை சட்டம் என, பல சட்டங்களில் இணைந்துள்ளன.இதில் சென்னை பல்கலையானது, பார்லிமென்ட் சட்டத்தில் நிறுவப்பட்டு, பின், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.பல்கலையின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒப்புதல் வழங்குவது, கண்காணிப்பது ஆகியவை குறித்து செனட், சிண்டிகேட், அகாடமிக் கவுன்சில் ஆகிய அமைப்புகள் கூடி முடிவெடுக்கும்.செனட் சார்பில், நிதி பிரச்னையும்; அகாடமிக் கவுன்சில் சார்பில், படிப்பு அங்கீகாரம், மாணவர் சேர்க்கை போன்ற பிரச்னைகளும் விவாதிக்கப்படும். இவற்றின் கூட்டங்களுக்கு சிண்டிகேட் என்ற ஆட்சிமன்றக் குழு கூடி ஒப்புதல் வழங்கும்.இந்நிலையில், சென்னை பல்கலையின் துணைவேந்தராக இருந்த கவுரி, கடந்த ஆகஸ்டில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, தற்காலிக நிர்வாகக்குழுவை முடிவு செய்ய, செப்டம்பரில் சிண்டிகேட் கூட்டம் கூடியது. ஏழு மாதங்களாக சிண்டிகேட் கூட்டம் நடத்தவில்லை.தமிழக அரசின் உயர்கல்வி துறை செயலர் கார்த்திக், தற்காலிக நிர்வாக கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். சிண்டிகேட், செனட் கூட்டங்களை நடத்த வேண்டும் என, அவரிடம் பல்கலையின் பேராசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.பல்கலையின் சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள் சுந்தரம், தமிழரசன், தமிழ்ச்செல்வி, பாண்டியன், ரவி சங்கர் மற்றும் மகாதேவன் ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டு, உயர்கல்வி செயலருக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியுள்ளனர். சிண்டிகேட் கூட்டத்தை நடத்தாததால், சென்னை பல்கலையின் கீழ் செயல்படும், 120 கலை, அறிவியல் கல்லுாரிகளின் மாணவர்களுக்கு, மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி நிலுவையில் உள்ளது. ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய பலன், புதிய படிப்புகளுக்கான அனுமதி, மாணவர் சேர்க்கை அனுமதி, நிதி நிலை விவாதித்தல், தொலைநிலை கல்வி மாணவர்களுக்கு புத்தகம் கொள்முதல் செய்வது என, பேராசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
6 hour(s) ago