உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருவீரட்டானேஸ்வரர் கோவிலில் ஜூன் 2ல் மஹா கும்பாபிஷேகம்

திருவீரட்டானேஸ்வரர் கோவிலில் ஜூன் 2ல் மஹா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் காமராஜர் நகர், அப்பாராவ் தெருவில் காமாட்சி அம்பாள் சமேத திருவீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன.கும்பாபிஷேகத்தையொட்டி வரும் 31ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. ஜூன் 1ம் தேதி விசேஷ திரவிய ஹோமம் உள்ளிட்டவை நடக்கிறது.ஜூன் 2ம் தேதி, காலை 10:30 மணிக்கு, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை