உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரம் மண் அணைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

சாலையோரம் மண் அணைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சியில் உள்ள ரோட்டு தெருவில், சமீபத்தில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.அவ்வாறு அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை, தரைமட்டத்தை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சாலைக்கும் தரைக்கும் இடையே பெரிய பள்ளம் போல் காட்சியளிக்கிறது.மேலும், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோரத்தில் செல்லும்போது, நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.எனவே, முத்தியால்பேட்டை, ரோட்டு தெருவிற்கு உயரமாக அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலையோரம் மண் அணைக்க, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி