உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாமலில் சிக்னல் பழுது வாகன ஓட்டிகள் அச்சம்

தாமலில் சிக்னல் பழுது வாகன ஓட்டிகள் அச்சம்

காஞ்சிபுரம் : சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை உள்ளது. இந்த சாலையை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறு வழிச்சாலையாகவும், 18 இடங்களில் சிறு பாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதில், தாமல் மற்றும் திருப்புட்குழி உள்ளிட்ட பல்வேறு பிரதான கடவுப் பாதைகளில் சிக்னல் பழுதாகி, அதன் கம்பங்கள் காட்சிப்பொருளாக மாறியுள்ளன.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சென்னை மற்றும் பெங்களூரு மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள், தேசிய நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் செல்கின்றனர். இதனால், தாமல் பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என, வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரதான கடவுப்பாதைகளில் அமைக்கப்பட்ட சிக்னல்களை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை