உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிக்னலில் பசுமை பந்தல் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

சிக்னலில் பசுமை பந்தல் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் அனைத்து சாலை சந்திப்புகளில் உள்ள சிக்னல்களைவிட, இரட்டை மண்டபம் சிக்னலில் மட்டுமே வாகன ஓட்டிகள், 120 வினாடிகள் நிற்க வேண்டிய நிலை உள்ளது.இருசக்கர வாகன ஓட்டிகளின் நலன் கருதி, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் உத்தரவின்படி, கடந்த ஆண்டு கோடை வெயில் துவக்கத்திலேயே, போக்குவரத்து போலீசார் சார்பில், இரட்டை மண்டபம் சிக்னலில் பசுமை நிழற்பந்தல் அமைக்கப்பட்டது.இதனால், வெயிலில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பசுமை நிழற்பந்தல் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.இந்நிலையில், காஞ்சிபுரத்தில், சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலில் நடமாடுவோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, கடந்த ஆண்டைப்போல, நடப்பாண்டும் இரட்டை மண்டபம் சிக்னலில் பசுமை நிழற்பந்தல் அமைக்க, காஞ்சிபுரம் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ